நான் சொல்வது சரிதானே!! ?

அமெரிக்காவின் ஆகாயப்படை

திங்கள், 29 நவம்பர், 2010

அமெரிக்காவின் ஆகாயப்படை























ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமான விமானம்

வெள்ளி, 5 நவம்பர், 2010


ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமான விமானம்


ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் விண்வெளிக்கு பறக்கக்கூடிய விமானமொன்றினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் பிரித்தானிய விஞ்ஞானிகள். சாதாரண விமானநிலைய ஓடுபாதையிலிருந்தே இந்த விமானத்தினையும் இயக்கக்கூடிய விதத்தில் வடிவமைக்கவுள்ளார்கள்.
சுமார் 700 மில்லியன் பவுண் (கிட்டத்தட்ட 123 பில்லியன் ரூபாய்) செலவின் இந்த விமானத்தினை வடிவமைக்கவுள்ளார்கள். இந்த விமானத்தில் நீங்கள் விண்வெளி சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும். சுமார் 24 பயணிகளை ‘ஸ்கைலோன்’ எனப்படும் இந்த விமானத்தில் காவிச்செல்ல முடியுமென தொழில்நுட்ப இயக்குநர் ரிச்சர்ட் வார்வில் குறிப்பிட்டுள்ளார். இவர், எதிர்ப்பு விசையில் இயங்கும் இயந்திரம் ஒன்றினையும் கண்டுபிடித்துள்ளார்.
நீர் நிலையிலுள்ள ஐதரசன் மற்றும் நீர்நிலையிலுள்ள ஒட்சிசன் வாயுக்களின் சக்திகளை பெற்று, விமானத்தின் உட்பகுதியில் இயந்திரங்கள் இயங்கவுள்ளன. இப்படியானதொரு சக்திமுறை பரிட்சார்த்தமாக பரீட்சிக்கப்படவுள்ளது. ‘ஸ்கைலோன்’ விமானம், சுமார் 270 அடி நீளத்தினைக் கொண்டது. இருந்தபோதிலும் இவ்விமானத்தில் 24பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும். ஏனைய விமானத்தின் பெரும்பகுதி தொழில்நுட்ப விடயங்கள் சார்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் இந்த விமானத்தினை முழுமையாக வடிவமைத்துவிடலாமென இதன் வடிவமைப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர். விண்வெளியை சுற்றிப்பார்க்க விரும்புகின்றவர்கள் சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள்வரை செலவுசெய்ய காத்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
‘ஸ்கைலோன்’ விமானத்தின் வருகையின் பின்னர் விண்வெளி சுற்றுப்பயணம் மிகவும் இலகுபடுத்தப்படுமென நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை உளவு பார்க்க நோர்வே நாட்டவரை விலைக்கு வாங்கிய அமெரிக்கா! | நெருடல்

தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை உளவு பார்க்க நோர்வே நாட்டவரை விலைக்கு வாங்கிய அமெரிக்கா! | நெருடல்