நான் சொல்வது சரிதானே!! ?

300 சித்தர் நூல்கள்

சனி, 10 பிப்ரவரி, 2018

================
300 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.

உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். ஆகவே தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் இப்படியான அழியும் நிலையில் உள்ள நிறைய நூல்களை நான் இனி வரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இப்படியான நூல்களை நான் நிறைய காலமாக சேகரித்து வருகின்றேன். உங்களி டம் உள்ள நூல்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னிடம் உள்ள நூல்களை PDF இக்கு மாற்றுவதற்கு காலங்கள் எடுக்கின்றன. அதற்காக மன்னிக்கவும். எம் மொழியைக் காப்பது எமது கடமை. உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.

எமது தமிழ் மொழி எமது உயிர். அதை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இப்படியான நூல்களை ஒருவரே வைத்து இருக்காமல் எல்லோருடைய கைகளிலும் கொண்டு சேர்த்து விடுங்கள். அதில் ஒரு சிறு துளியைத் தான் நான் உங்களுடன் சேர்ந்து செய்கின்றேன். எம் போன்ற நாடற்ற அகதியாய் வாழ்ந்து பாருங்கள் தெரியும் எம் இனத்தின் அருமையும் எம் உயிர் மொழியின் அருமையும். ஆதலால் பழைய தமிழ் நூல்களை அழியாமல் எல்லோரும் காப்பாற்றுவோம்.

இதில் 300 பழைய சித்தர் நூல்கள் உள்ளன. ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட மூன்று பாகங்களையும் ஒன்றாக இங்கு பதிவேற்றம் செய்து இருக்கின்றேன் .

உறவுகளே கீழ்வரும்300 நூல்களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். ஏதாவது தடங்கல் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கின்றேன்.

கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். ஆகவே தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது தமிழ் மொழி எமது உயிர். அதை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இப்படியான நூல்களை ஒருவரே வைத்து இருக்காமல் எல்லோருடைய கைகளிலும் கொண்டு சேர்த்து விடுங்கள்.
அதில் ஒரு சிறு துளியைத் தான் நான் உங்களுடன் சேர்ந்து செய்கின்றேன்.

எம் போன்ற நாடற்ற அகதியாய் வாழ்ந்து பாருங்கள் தெரியும் எம் இனத்தின் அருமையும் எம் உயிர் மொழியின் அருமையும்.
இலட்சக் கணக்கான எமது உயிர்த் தமிழ் உறவுகளை ஈழத்தில் எம்மால் காப்பாற்ற முடியாமல் நாம் இழந்து விட்டோம். அது தான் முடியாமல் போனாலும் அழியும் நிலையில் உள்ள எமது உயிர் தமிழ் நூல்களையாவது காப்பாற்றப் போராடுவோம் . ஆதலால் பழைய தமிழ் நூல்களை அழியாமல் எல்லோரும் காப்பாற்றுவோம். எனது மொழியும் எனது இனமும் எனது உயிர். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது எமது மொழியாகவும் இனமாகவும் இருக்கட்டும்.

இந்தப் பணி மிகவும் கடினமான பணி. ஒவ்வொரு நூலகளையும் நாங்கள் சேகரிப்பதற்கு நிறைய போராட வேண்டி உள்ளது. நீண்ட தூரம் நாங்கள் பயணம் செய்ய வேண்டி உள்ளது. நிறைய உறவுகள் தாங்கள் வைத்து இருக்கும் நூல்களை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாமல் உள்ளார்கள். தயவு செய்து நீங்கள வைத்து இருக்கும் நூல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதை நாங்கள் எல்லோருடைய கைகளிலும் சேர்த்து விடுகின்றோம்.
வேணும் என்றால் நீங்கள் தரும் நூல்களுக்கு பணம் தருகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் கட்டாயம் எல்லாம் முடியும்.

இன்னும் இப்படியான அழியும் நிலையில் உள்ள நிறைய நூல்களை நான் இனி வரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இப்படியான நூல்களை நான் நிறைய காலமாக சேகரித்து வருகின்றேன்.

என்னிடம் உள்ள நூல்களை PDF இக்கு மாற்றுவதற்கு காலங்கள் எடுக்கின்றன. அதற்காக மன்னிக்கவும். எம் மொழியைக் காப்பது எமது கடமை. உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.

இந்த நூல்களை சேகரிப்பதற்கு உதவிய நாமக்கல்லை சேர்ந்த சித்த வைத்தியர் வெங்கடாட்சலம் அண்ணாவிற்கு நிறைய நன்றிகள்.
ஓம் நமசிவாய.

பாகம் : மூன்று - 82 சித்தர் நூல்கள்

பாகம் : இரண்டு -133 சித்தர் நூல்கள்

பாகம் : ஒன்று - 85 சித்தர் நூல்கள்

பாகம் : மூன்று

சிவன் சித்தர் முகநூல் கீழ் இயங்கும் கட்செவி (WhatsApp) அணிகளில் இதுவரை பகிரப்பட்ட  பழைய நூல்களை ஒன்றாக தொகுத்து Google drive ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,📤

நமது பழைய நூல்கள் அழியாமல் பாதுகாக்கவும்,
அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் இந்த Link மற்றும் நூல்களின் பட்டியல்.pdf பகிரப்படுகிறது, எனவே இந்த இணைப்பை அவரவர் WhatsApp குழுக்களிலும்,நண்பர்களிடமும்,முகநூல்களிலும் என அனைவருக்கும் பகிருங்கள் 👇🏽📨📧

https://drive.google.com/open?id=0BxutR2bB0A7LRHpmeU1mUGQ1OHM

நமது பழமையை காப்போம்,👍🏽
நமது பாரம்பரியம் அறிவோம்,👍🏽


அன்பே சிவம்🙏🏽

தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

துளசி

வியாழன், 16 ஏப்ரல், 2015

துளசி (Ocimum sanctum)

மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் – 5 கிராம்

கீழாநெல்லி – 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு – 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு

AutoCAD 2015

Autodesk AutoCAD 2015 (32-64 bit) Full + Keygen and Key FOR COMPUTER :
http://ammapettai.com/autodesk-autocad-2015-32-64-bit-full-keygen-and-key/


tamil live tv

ஆண்ட்ராய்டு மொபைலின் தமிழ் live tv யில் வேலை செய்யாமல் இருந்த அனைத்து சேனல்களும் புதிய version யில் வேலை செய்கிறது ..
அந்த புதிய அப்ளிகேசனை download செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.
http://www.apkland.net/2015/04/watch-live-indian-tv-channels-online.html
iphone user களுக்கு விரைவில் நீங்கள் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்கின்றேன்...
Watch Live Indian TV Channels Online With High Quality | Live Tamil TV

சனி, 28 ஜனவரி, 2012


விரும்பப்படும்firefox இணைய 
உலாவியை ஒத்ததாக அமைந்துள்ளது ; அத்துடன் மிக வேகமாகவும் இந்த இணைய உலாவி செயல்படுகின்றது; 

மற்றைய இணைய உலாவிகளுக்கு தரம் குறையாத அம்சங்களை இந்த உலாவி கொண்டுள்ளது ;

இதன் சிறப்புக்கள் :

இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி (தமிழ் உண்டு ;)

இந்திய செய்திகள் ,தொலைகாட்சி நிகழ்சிகள் நேரடி தொலைகாட்சிகள் பார்க்கும் வசதி ;  மற்றும் இந்திய மொழி திரைபடங்கள் பாடல்கள் என்பவற்றை இந்த உலாவி தருகிறது ;

facebook ,twitter, youtube, gmail, yahoo,இதுபோன்ற சமூக வலைத்தளங்களை அணுகும் வசதி 

இணைய உலாவியின் பின்னணி இந்தியாவின் சிறப்பு படங்கள் மூலம் மாற்றலாம் அத்துடன் இந்த உலாவியில் இருந்து வால்பேப்பர் பெறலாம் ;

ஆன்லைன் விளையாட்டுக்கள் என சுமார் 1500 க்கு மேற்பட்ட டூல்ஸ் களை கொண்டுள்ளது இந்த இணைய உலாவி 

தரவிறக்கம் செய்து பயன்பெற தளம் . EPIC BROWSER 



நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம். 
உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1. www.donothingfor2minutes.com 
                   இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள் . 
2. www.Rainymood.com 
      இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம் . அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை.
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். 

                  
 இப்போதெல்லாம் கணினியிலே  எல்லோருக்கும் காலம் 
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக 
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது 
குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான். 
                                            அந்தவகையில் கணினியில் இருந்தவாறே 
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட 
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க 
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIO PLAYER. 



 இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி 
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் 
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை 
பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில் 
பதிவு செய்யலாம் . 
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும் 
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய 
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம். 
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில் 
தருகிறது. 

இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற 
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால் 
செய்யல்லாம்.
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது. 
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க 



புதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 


  இந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்   
 ஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்  
  பார்க்கலாம். 


    இந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் , 
    பஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன . 

    இந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில  
    திரைப்படங்களையும் பார்க்கலாம் .

    இந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய  
    திரைப்படங்கள் பார்க்கலாம் . 

     இந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

  புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

    இந்தி சிறந்த புதிய திரைப்படாங்களை பார்க்க உதவுகிறது .

      புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . 




 ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களை உங்கள் கணினியில் முழுமையாக ஆன்லைனில் இருந்தவாறு பார்க்க முடியும் . இதற்கு உதவும் சில தளங்களை 
தொகுத்துள்ளேன் 










4. HULU 


மரணமே வந்தாலும்

வியாழன், 19 ஜனவரி, 2012




அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

சிந்தனை துளிகள்







ஒரு தந்தையின் கடிதம்:


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை 
சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். 
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் 
பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்


நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது 
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்



ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...


வீழ்வதில் வெட்கப் படாதே!  வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!


நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
 

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
 

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.


ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.


எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.


மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.



கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன
- எங்கோ படித்தது