நான் சொல்வது சரிதானே!! ?

சனி, 28 ஜனவரி, 2012



நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம். 
உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1. www.donothingfor2minutes.com 
                   இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள் . 
2. www.Rainymood.com 
      இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம் . அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை.
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக