நான் சொல்வது சரிதானே!! ?

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள் & வீடியோ

ஞாயிறு, 31 ஜூலை, 2011



மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.




இம் முப்பரிமாண தோற்றமானது விஞ்ஞானிகளுக்கு சூரியனைப் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

*
வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=qLB5ma2Yz1I&feature=player_embedded


***
நன்றி வீரகேசரி
***

தாவரத் தங்கம் - காரட்


தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா? இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.

காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்.


காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது... ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.                         எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... ராமமுா்த்தி                 

பொன்மொழிகள் !!!!!









விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட‌வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு
விவேகானந்தர் மொழி - 1



அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்;நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்- சுவாமி விவேகான‌ந்த‌ர்



நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்- சுவாமி விவேகானந்தர்


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.



வில்லியம் ஷேக்ஸ்பியர்:



வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்


1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.


2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்


3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.





அடால்ஃப் ஹிட்லர்:


நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.




ஆலன் ஸ்டிரைக்:


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


அன்னை தெரசா:


இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.


நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.




பான்னி ப்ளேயர்:


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.




லியோ டால்ஸ்டாய்:


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.


அப்ரஹாம் லிங்கன்:


கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.




ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.


சார்லஸ்:
                
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.                                                                      
                            எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... ராமமுா்த்தி                 
 
 

நம்ம ஊர் : CHENNAI


                 

கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.

காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.

கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.

ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.

சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.

தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.

சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.

நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.

கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.

50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.

ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.

செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.

எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.

பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.

கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.

தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.

ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.

புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.

இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.

100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.

மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.

உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.

இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க

தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.

டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர்
 எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... ராமமுா்த்தி                 
 

வைரமுத்துவின் "தோழிமார் கதை"



வைரமுத்து 1953 ஆம் ஆண்டு ஆடி 13 இல் தமிழ்நாட்டில் தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் “நிழல்கள்“ திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலை பொழுது..“ எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.

“கள்ளிக்காட்டு இதிகாசம் ” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

                 
 எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... ராமமுா்த்தி
                 

அறிஞர்களின் முத்துக்கள்...!!!


கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்...

ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர். 



நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின். 
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர். 
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன். 
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ. 
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள்.
-யாரோ. 
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல். 


பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன். கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-பல்கேரியப் பழமொழி. 
எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.



என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
-மாவீரன் நெப்போலியன். 
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான். உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-யங். 

பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.
-யாரோ. 



நூலறிவு பேசும்- மெய்யறிவு கேட்கும்.
-ஹோம்ங். 
நிச்சயமாகவே, நெருப்பு விறகை சாப்பிடுவது போல, பொறாமை நன்மைகளை சாப்பிட்டுவிடும்.
-நபிகள். 


பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவன் கஞ்சனாக இருக்கிறான். நான் பணக்காரன் என்று நினைத்து செலவு செய்பவன் ஏழையாகின்றான். -ஷேக்ஸ்பியர். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஓரே மதம்தான்.
-வால்ட்டேர். 
கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம்.
-செஸ்டர்ன். 
துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை.
-ஹைஸாடிக். 

எப்போது நீ வணங்கத் தொடங்குகிறாயோ அப்போதிலிருந்து நீ வளரவும் தொடங்குகிறாய்.
-ஸ்டர் பீல்டு. 

பிறருடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
-முகம்மது நபி. 




நானும் குறைகள் நிறைந்த மனிதனாக இருப்பதாலும், எனக்கும் பிறருடைய அனுதாபம் தேவைப்படுவதாலும், நான் பிறருடைய குறைகளை கண்டுபிடிக்க அவசரப்படுவதில்லை. -காந்தியடிகள். 


விலைவாசிகள் இறக்கப்படுவது ஓன்றே உண்மையான வாழ்க்கைத்தர உயர்வுக்கு வழிகோலும்.
அறிஞர் அண்ணா. 


மலரைப் பார், கொடியைப் பார், வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதை பார்க்க் முயன்றால் நீ மலரையும், கொடியையும் பார்க்க முடியாது.
கண்ணதாசன்.


நான் என்ற உணர்வு நிச்சயமாக தவறில்லை. நான் மாத்திரம் தான் என்ற உணர்வு தான் தவறு.
டாக்டர் எஸ். மனோகர் டேவிட்.

உங்கள் கூடாரங்கள் பிரிந்திருக்கட்டும். உங்கள் இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்.


கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.
பெர்னாட் ஷா.


கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
கன்பூசியஸ்.


உனது துயரங்களை பிறரிடம் கூறாதே. பலர் அதற்காக வருத்தப்படமாட்டார்கள். சிலரோ அதில் மகிழ்ச்சியும் அடைவர்.
யாரோ.


அவதூரை அடக்குவதற்கு அதை அலட்சியமாக தள்ளிவிடுவதே முறை.
யாரோ.

மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது சாபக்கேடாய் அமையும்.
ஹெர்மன் எல். லேலேண்ட்.


முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடுப்பதுதான்.
யாரோ.


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
ஹிட்சாக்.


நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை. மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.


நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால் அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால் நாம் இடறி விடுவோம்.
கோல்டன்.


வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்பவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
ஆண்ட்ரூ.


உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
தந்தை பெரியார்.


கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின் கல்விக்கு செலுத்துங்கள்.
டாக்டர் அம்பேத்கார்.

நல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது. அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடிவிடுவார்கள்.
சுந்தர ராமர். 


ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.
-அரிஸ்டாட்டில்.
 



நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.
-பெர்னாட்ஷா.


சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம் அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.
-கௌப்பர்.


பழிவாங்க விரும்பினால் முதலில் அலட்சியம் செய்து விடு. அது ஆரம்பம். மன்னித்து விடு. அது முடிவு.
-பெர்னாட்ஷா.


உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை. நிறைய பொருமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை. தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கணிவுடைமை.
-மாத்யூ ஆர்னால்ட்.


மக்களின் வறுமையை போக்க வேண்டுமானால் முதலில் அவர்களுடைய அறியாமையை கட்டாயக்கல்வி மூலம் நீக்குங்கள். சிக்கனமாக வாழக் கற்றுக்கொடுங்கள்.
விஸ்வேஸ்வரய்யா.


ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.
-அரிஸ்டாட்டில்.


சிலர் பணத்தை வெறுப்பாக கூறுவர் அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.
-கோல்ட்டன்.


ஓரு காரியத்தை ஏன் தவறாக செய்தோம் என்று விளக்கம் சொல்வதற்குள் அதை சரியாக செய்து விடலாம்.
-யாரோ.



பணம் என்பது ஓரு சாதனைப் பொருள். அதுவே சுகமன்று. முடிவன்று. அவரவர்களுக்கு ஓரு வரம்புண்டு. அந்த வரம்புக்கு மேல் மிஞ்சின பின் அது ஓரு பாரமும் கவலையும் தான்.
-ராஜாஜி.


ஓற்றுமையாக இருங்கள் ஆனால் மிக நெருக்கமாக இருக்காதீர்கள்.
-கலீப் இப்ரான்.


அனுபவம் என்பது புது மாதிரியான வாத்தியார். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் தான் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
-கவிஞர் கண்ணதாசன்.



கடமையைச் செய்கின்றவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும். கவலைப்படுகின்றவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும்.
-யாரோ.


விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்கு சமம்.
-வெஸர்மாஸ்.


பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி. - யாரோ 
ராமமுா்த்தி

தமிழன் குணாதிசயங்கள்



தமிழனுக்குனு ஒரு மகத்துவம் இருக்கு. விவேக் சொல்கிற மாதிரி “என்னதான் இப்போ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாலும்… ஒரு காலத்துல தெருவுல வித்தை காட்டுறவன் முன்னாடி உட்காந்து கை தட்டுன கும்பல் தான எல்லாரும்”. அது மாதிரி அக்மார்க் தமிழனுக்குனு பிரத்தியோகமான சில குணாதிசயங்கள் உண்டு.. (நகைச்சுவையாக).


1. எந்தப்பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க….!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க…!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு…..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9… ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க.! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார


முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ… லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி…!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க…. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க…!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு


இருக்கும்…!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும்.
[உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க…

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்.

அடடா.. இப்போது நீங்களும் ஒரு அக்மார்க் தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள். அது சரி.. மேலே கொடுக்கப்ட்ட குணாதிசயங்களை தவிர வேறு ஏதேனும் விடுபட்டு இருக்கிறதா? கண்டிப்பாக இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது தோன்றினால் கீழே கிறுக்கவும். வாழ்க தமிழன்!

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...

திங்கள், 2 மே, 2011

                                                                    
வணக்கம்! எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... ராமமுா்த்தி

                 


நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனைமென்பொருள்களையும் ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip
நன்றி!

கையடக்க தொலைபேசிகளுக்கான தொடர்பாடல் மென்பொருட்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2011

தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலைபேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்றன. அத்தகைய கையடக்க தொலைபேசிகளுக்கான சில தகவல் தொடர்பாடல் மென்பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் தொடர்பான பதிவு இது.


இந்த மென்பொருட்கள் மூலமாக நாங்கள் இன்னொருவருடன் குரல் வழியாகவோ(Voice) , தகவல்களை எழுத்து மூலமாக(Text Chat) பகிர்ந்து கொள்ளவோ முடியும். இந்த மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு கையடக்க தொலைபேசி வழங்குனர்களால் GPRS கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும். இவை மிகவும் செலவு குறைந்த தொடர்பாடல் மென்பொருட்கள் ஆகும். இவற்றினூடாக வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் மிக குறைந்த செலவில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். இவற்றை நீங்கள் பாவிக்க வேண்டுமாயின் GPRS வசதியுள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.


3G,3.5G வசதியுள்ள கையடக்க தொலைபேசிகள் இன்னும் சிறப்பானவைஇத்தகைய கையடக்க தொலைபேசிகள் மூலமாக குரல் வழி தொடர்பினை இலகுவாக மேற்கொள்ளமுடியும்.

இதோ அத்தகைய மென்பொருட்கள் சிலவும் அவற்றின் சுட்டிகளும்.

1. eBuddy - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.




தரவிறக்க இணையச்சுட்டி: eBuddy




2. Snaptu - YouTube, MySpace, hi5, Orkut, Friendster, Wikipedia, Gmail, eBay, Bebo போன்றவற்றின் பயனர் கணக்கினை பயன்படுத்தி தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் பல வசதிகளும் இதிலுள்ளன.

தரவிறக்க இணையச்சுட்டி:Snaptu





3. Nimbuzz - Skype,facebook, Windows Live Messenger /MSN, Yahoo!, ICQ, AIM, Google Talk, Gadu-Gadu, Hyves போன்றவற்றின் பயனர் மேலும் சில melummmemeதொடர்பாடல்களை மேற்கொள்ள முயும். இது குரல்வழி தொடர்பாடலுக்கு மிக சிறந்த மென்பொருள்.

தரவிறக்க இணையச்சுட்டி: Nimbuzz




4. mig33 - Yahoo!, MSN, Facebook Chat, AIM, ICQ மற்றும் Google talk போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழங்கிகளின் பயனர் கணக்கினை பாவித்து தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.

தரவிறக்க இணையச்சுட்டி: mig33






மேலும் சில சுட்டிகள் இதோ:

Rocketalk - தரவிறக்க இணையச்சுட்டி: Rocketalk


Nefanasa Yahoo - தரவிறக்க இணையச்சுட்டி: Nefanasa Yahoo


MyXenZo - தரவிறக்க இணையச்சுட்டி: MyXenZo
                                                                       
வணக்கம்! எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... தங்கள் மேன்மையான ஆதரவை நோக்கி.... உங்கள் நண்பன்
ராமமுா்த்தி

கையடக்கத்தொலைபேசிகளில் இணையவானொலி-இலவச மென்பொருட்கள்


கையடக்கத்தொலைபேசிகளில் இணையப்பாவனை என்பது இன்றும் அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க தொலைபேசிகளில் பண்பலை வாயிலான வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள். இணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.

அத்தகையதொரு மென்பொருட்கள் தான்  iRadio மற்றும் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.

iRadio என்னும் மென்பொருளில் 700 க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் உள்ளன. இந்த மென்பொருளில் தமிழ் மொழியிலான பல இணைய வானொலிகளும் இடம்பிடித்துல்லைமை மிகவும் சிறப்பானதொரு விடயம்.

iRadio என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான மென்பொருள் சுட்டி:
கணணி வழியிலான சுட்டி: iRadio
கையடக்கத்தொலைபேசி  வழியிலான சுட்டி: m.getjar.com
                                                                      குறியீடு: 083548 


VirtualRadio  என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.
மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டி: VirtualRadio 
கையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com 
                                                                     குறியீடு:084278 
         
                                                                         
வணக்கம்! எனது வலைப் பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.... தங்கள் மேன்மையான ஆதரவை நோக்கி.... உங்கள் நண்பன்
ராமமுா்த்தி

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011






அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் எழுதியது


E - Book முதல் பாகம்



MOBILE தொலைந்தால்


MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL PHONEகும் பொருந்தும்



மென்பொருள்




SOFTWARE மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE ஐ UNINSTALL செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.


தரவிறக்கம் 


புகார் To  E-Mail


send an e-mail to cop@vsnl.net with the following info.

Your name:

Address:

Phone model:

Make:

Last used No.:

E-mail for communication:

Missed date:

IMEI No:

செல் போனில் wallpaper உங்கள் பெயரில்





இந்த வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper  முதலில் தேர்வு செய்ய வேண்டும்.


உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox  கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம்.


இணைய உலவி தமிழ் மொழியில் - 2




Mozilla-Firefox



இணைய உலவி மிக புகழ் பெற்ற Firefox, Chrome இரண்டும் தமிழ் மொழியில் நமக்கு வந்துள்ளது. Mozilla தரும் Firefox நாம் ஆங்கிலத்தில்  பயன்படுத்தி வந்த வடிவமைப்புடன் இணைய உலவி அப்படியே தமிழ் மொழியிலும் வழங்கி இருக்கிறது நமது வசதிக்காக தமிழ் சொல்களின் அருகில் அந்த ஆங்கிலத்தில் வார்த்தையின் முதல் எழுத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதனால் எந்த வித குழப்பம் இல்லமால் நாம் பயன்படுத்தலாம் அதே வேகம், அதே Shortcut, அதே தோற்றம் வேண்டிய நிறத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வசதி என அனைத்தும் ஒருங்கிணைந்தது.


Google-Chrome

Google தரும் இணைய உலவி Chrome இது தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட புது வசதிகள் கொண்டது, அனைத்து வசதிகளுக்கும் ஒரே பெட்டி,புதிய தாவல் பக்கம் பயன்பாட்டின் குறுக்குவழிகள், முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து, தேடல் மற்றும் வலைப்பக்கங்கள் இரண்டிற்குமான பரிந்துரை மெனுவில் நமது விருப்பங்களை தேர்வு செய்தால் என பற்பல வசதிகள் கொண்டது. இதை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம்.





ராமமுா்த்தி
                 

வருக வருக! என உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி