நான் சொல்வது சரிதானே!! ?

வியாழன், 30 டிசம்பர், 2010


அனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..............!

பல இணையதளங்கள் சென்று தமிழ் செய்திகள் பார்ப்தற்கு ஆகும்
நேரத்தை குறைப்பதற்க்காக ஒரு இணையதளம் வந்துள்ளது
.                  

தமிழ் செய்திகள் படிப்பதென்றால் பல பத்திரிகைகளின்

இணையதளங்களுக்குச் சென்று தான் நாம் படிக்க வேண்டும்
சில பத்திரிகை இணையதளங்களுக்கு சென்றால் அதன்
தோன்றும் நேரம் ( Loading Time) அதிகமாக இருக்கும்.
இப்படி பல இணையதளங்களுக்கு சென்று செய்திகளைப்
பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சலிப்பு வந்துவிடும்.
முக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க புதிதாக ஒரு
இணையதளம் வந்துள்ளது. தினமலர் பத்திரிகையில் இருந்து
கூகுளின் தமிழ் செய்திகள் வரை அத்தனையும் உடனுக்குடன்
நேரடியாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தெரிந்து
கொள்ளலாம். தமிழ் உள்ளங்களைத் திருடும் இதன்

இணையதள முகவரி: http://www.thiruda. com           

http://file1.hpage.com/archive/graphics/en/Nature/flower4.gif
 
எழுதியவர் : பரவை ராமமுா்த்தி
                 

புதன், 29 டிசம்பர், 2010

அனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்- Auto Shutdown




இன்றைய உலகில் கணினி உபயோகிக்காத இடமே இல்லை. சிறிய கடைகள் முதல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வரை உபயோகித்து கொண்டிருக்கும் இந்த கணினியின் செயல் பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நம் கணினியில் நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நம் கணினியில் அவசியமாகிறது.

பயன்கள்
  • நாம் கணினியில் வேலை செய்து கொண்டு இருப்போம் திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையோ அல்லது ஞாபக மறதியாலோ நம் கணினியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணினியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம். 
  • அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணினி தானாகவே Shutdown செய்யப்படும்.
  • இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
  • நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது அது டௌன்லோட் ஆகும் வரை காத்திருக்காமல் Time Remaining பார்த்து அதற்கேற்ற படி நேரத்தை செட் செய்து விட்டால் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினி தானாகவே அணைக்க பட்டு விடும்.
  • இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது.
  • மிகச்சிறிய அளவே உடைய (573.34kb) இலவச மென்பொருளாகும். 
பயன்படுத்தும் முறை
  • கீழே download பட்டனை க்ளிக் செய்து இந்த மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். 
  • வாரம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆகவேண்டும் என நினைத்தால் கீழே உள்ள Every week on என்பதில் க்ளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.
  • கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இதில் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட Shortcut key செட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 
  • இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். 
இனி நாம் நம் கணினியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும்.


 
எழுதியவர் : பரவை ராமமுா்த்தி
                  

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை: 

  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து  Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.  
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம். 
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.

 எழுதியவர் : பரவை ராமமுா்த்தி
                 


வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி பார்க்க -Chrome AddOn

நாம் இணையத்தில் பல பக்கங்களை பார்த்து கொண்டு இருப்போம். ஒரு வித்தியாசத்திற்க்காக  இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலைகீழாக கவிழ்த்து பார்பீர்களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவி Win + ; (semicolon) தட்டினால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.




இது போன்று வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி காட்டலாம். குழந்தைகளுக்கு இந்த ரகசியத்தை கூறாமல் அவர்களை வெறுப்பு ஏற்றி விளையாடலாம்.
 இந்த நீட்சியை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

 எழுதியவர் : பரவை ராமமுா்த்தி