நான் சொல்வது சரிதானே!! ?
MOBILE தொலைந்தால்
MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL PHONEகும் பொருந்தும்
மென்பொருள்
SOFTWARE மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE ஐ UNINSTALL செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.
தரவிறக்கம்
புகார் To E-Mail
புகார் To E-Mail
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:
செல் போனில் wallpaper உங்கள் பெயரில்
இந்த வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம்.
இணைய உலவி தமிழ் மொழியில் - 2
Mozilla-Firefox
இணைய உலவி மிக புகழ் பெற்ற Firefox, Chrome இரண்டும் தமிழ் மொழியில் நமக்கு வந்துள்ளது. Mozilla தரும் Firefox நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தி வந்த வடிவமைப்புடன் இணைய உலவி அப்படியே தமிழ் மொழியிலும் வழங்கி இருக்கிறது நமது வசதிக்காக தமிழ் சொல்களின் அருகில் அந்த ஆங்கிலத்தில் வார்த்தையின் முதல் எழுத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதனால் எந்த வித குழப்பம் இல்லமால் நாம் பயன்படுத்தலாம் அதே வேகம், அதே Shortcut, அதே தோற்றம் வேண்டிய நிறத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வசதி என அனைத்தும் ஒருங்கிணைந்தது.
Google-Chrome
Google தரும் இணைய உலவி Chrome இது தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட புது வசதிகள் கொண்டது, அனைத்து வசதிகளுக்கும் ஒரே பெட்டி,புதிய தாவல் பக்கம் பயன்பாட்டின் குறுக்குவழிகள், முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து, தேடல் மற்றும் வலைப்பக்கங்கள் இரண்டிற்குமான பரிந்துரை மெனுவில் நமது விருப்பங்களை தேர்வு செய்தால் என பற்பல வசதிகள் கொண்டது. இதை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம்.
நண்பனுக்காக
புதன், 2 பிப்ரவரி, 2011
என் உணர்வு நண்பனே
உன்னை கண்டவுடன்
என்மனதில் ஏதோ உணர்வு!!!
நட்பு – ‘வித்து‘
என்மனதின் ஒரு மூலையில்
முளைத்து முத்திட்டது!!!
இந்த மூன்றாண்டில்
அன்பு மழைபொழிந்து
அழகாய் வளர்ந்து!!!
ஓடித் திரிந்த தென்றலால்
சிரித்து ததும்பியது!!!
பிரிவு – வாடை வீசியதால்
சிறு மேகமும் களைந்து!!!
தலைசாய்ந்து வாடிய நேரம்
சிறுதுளியை கண்டால்
ஆனந்த கூத்தாடும்
பசியுடன் காத்த‘மரம்‘போல!!!
இலகிய இரு நெஞ்சங்களில்
அதே உணர்வு-காரணம்
“மீண்டும் சந்திப்போம்” என்றதால்!!!
இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து
சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே!
நிலம் மீட்டுத் தாருங்கள்…
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில்
செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும்
உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும்
சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!
அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று
தேடி அடையாளம் தெரியாத
ஒரு பிணத்துக்கு அழுது தொலைக்கும்
பிள்ளைகளின் அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும் ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை
செய்துவைத்த இறையாண்மைமீதுதான்!
குரங்குகள் கூடிக் கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக் கட்ட முடியாதா?
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல!
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை!
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை!
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால் கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
அங்கே சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில் தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்…
செல்போனில் திருக்குறள் முதல் அனைத்து புத்தகங்ககளும் படிக்க
பாடல்கள் வைத்திருப்போம். ஆனால் உலகப்பொதுமறை நூலாம்
திருக்குறளை நாம் படிக்கும் காலத்தில் படித்ததோடு சரி.இனி
அந்த கவலை நமக்கு இல்லை.திருக்குறளையும் நாம் நமது
செல்போனில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தசாப்ட்வேரில் திருக்குறள் முதல் அனைத்து தமிழ் நூல்களையும்
வைத்துள்ளார்கள். நாம் நமக்கு தேவையான புத்தகங்களை பதி
விறக்கம் செய்து மெதுவாக படித்துக்கொள்ளலாம். இந்த தளம்
செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.
இங்கு நடுவில் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள மொபைல் புத்தகத்தை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேல்புறம் உள்ள ClickHere to Register Free கிளிக் செய்யுங்கள்.
இதில் உள்ள விவரங்களை பதிவு செய்யுங்கள்.
இதில் உள்ள மொபைல் பெயரை தேர்ந்தேடுங்கள்.
அதில் உங்கள் மொபைல் மாடல் எண்ணை தேர்ந்தேடுங்கள்.
இறுதியில் உள்ள Register & Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் விவரம் கிடைக்கும்.
சமீபத்தில் பதிவேற்றம் செய்த புத்தகங்கள்:-
அதிகம் பேர் டவுண்லோடு செய்த புத்தகங்கள்.
பதிவின் விவரங்கள் கீழே:-
இறுதியில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை டவுண்லோடு
செய்யுங்கள். (நீங்கள் அதில் ப்ரிவியுவினையும் காணலாம்)
உங்கள் கணிணியில் சேமித்துகொள்ளுங்கள். இறுதியாக
உங்கள்மொபைல் போனை கணிணியுடன் டேடா கேபிள்
மூலம் இணையுங்கள்.
பதிவிறக்கம் செய்து புத்தகத்தை உங்கள் மொபைலில் உள்ள
கேம்ஸ்ஸில் சேமியுங்கள்.அவ்வளவுதான். இனி உங்கள்
மொபைலில் புத்தகங்கள் ரெடி. இதில் அறிஞர் அண்ணாவின்
சொற்பொழிவுகளும் உள்ளது. மொபைலில் நீங்கள் லோடு
செய்ததும் புத்தகத்தை ஸ்கோரல் செய்தும் - ஒவ்வோரு
பக்கமாகவும் படிக்கும் வசதி உள்ளது. உங்கள் மொபைலில்
தமிழ் எழுத்துரு சாப்ட்வேர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
எளிய தமிழில் போட்டோசாப்
நிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ளலாம்.