புதன், 2 பிப்ரவரி, 2011
என் உணர்வு நண்பனே
உன்னை கண்டவுடன்
என்மனதில் ஏதோ உணர்வு!!!
நட்பு – ‘வித்து‘
என்மனதின் ஒரு மூலையில்
முளைத்து முத்திட்டது!!!
இந்த மூன்றாண்டில்
அன்பு மழைபொழிந்து
அழகாய் வளர்ந்து!!!
ஓடித் திரிந்த தென்றலால்
சிரித்து ததும்பியது!!!
பிரிவு – வாடை வீசியதால்
சிறு மேகமும் களைந்து!!!
தலைசாய்ந்து வாடிய நேரம்
சிறுதுளியை கண்டால்
ஆனந்த கூத்தாடும்
பசியுடன் காத்த‘மரம்‘போல!!!
இலகிய இரு நெஞ்சங்களில்
அதே உணர்வு-காரணம்
“மீண்டும் சந்திப்போம்” என்றதால்!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக